பல்பங்கல்

பல்பம் போன்று எழுதும் தன்மையுடைய கல் வகை.

[தரையில் எழுதவும், கோலம் போடவும்… அகல், விநாயகர் சிலை உள்ளிட்ட சிற்பங்கள், கைவினைப் பொருட்கள் செய்யவும் பயன்படுவது. அதிகம் கோலம் போட (சிமெண்ட் மற்றும் கல் தரையில்) பயன்படுவதால் ‘கோலக்கல்’ என்றும், கோடுபோட (கற்கள் மற்றும் சுவர்களில்) பயன்படுவதால் ‘கோடுகல்’ என்றும் அழைப்பர். சிறுவர்கள் தரையில் தேய்த்து பல்பம் வடிவாக்கி (விரல் நீளக் குச்சிபோன்று) பலகையில் எழுதுவர்.]

[பல்பங்கல் = பலபங்கல் = கோலக்கல் = கோடுகல்]

 – ஒன் பல்பங்கல்ல மாடத்துலதான் எங்கயோ வச்சிருந்தன், யாரு எடுத்தாங்கன்னு தெர்ல.

– பல்பம் இல்லன்னா என்னடா… இந்தா, இந்த பல்பங்கல்ல எடுத்துனு போயி எழுது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=