மாவுக்கல்

மாவுத்தன்மையுடைய கல் வகை.

[பார்க்க உறுதியான கல் போன்று தோற்றம் தந்தாலும், பொடிப் பொடியாக (மாவு மாவாக) உடையக் கூடியது. இக்கல்லை எடுத்து வந்து சிறிது சிறிதாக உடைத்து உரலில் போட்டு, கடப்பாரையால் இடித்து மாவாக்கி கோலம் போடுவது வழக்கம்.]

[மாவுக்கல் = கோலமாவுக்கல்]

– பொங்குலுக்கு இன்னும் செரியா ஒருமாசம்தான் கீது, வாங்கடி போயி மாவுக்கல்லு எடுத்தாருவம்.

– அரசிமாவு கோலம்லாம் இன்னிக்கி யாரு போடறாங்க, எல்லாம் கோலமாவுக்கல்லு கோலம்தான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=