எதற்கிந்த இணையதளம்?

வணக்கம் வடிவு,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்க புதிய இணையதளத்த இப்போதான் பார்த்தேன். ரொம்ப நேர்த்தியாகவே வந்திருக்கு. ஆனா ஒரு கேள்வி. வாசிப்பு வெகுவா குறைந்துட்டு வர்ற இந்த நேரத்துல எந்த நம்பிக்கையில தினமும் எழுதனும்னு இணையதளம் தொடங்கியிருக்கீங்க?
கேட்கணும்னு தோணுச்சு. தவறிருந்தா மன்னிச்சிருங்க வடிவு.
– கார்த்திக், மதுரை.
*
அன்புள்ள கார்த்திக்,
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.
முதலில் உங்கள் வினாவைக் கண்டதும் மெல்லிய புன்னகைதான் வந்தது. யார் சொன்னது உங்களுக்கு வாசிப்பு குறைந்துகொண்டு வருதுகிறதென்று? இப்படி வேண்டுமானால் சொல்லலாம். முன்மாதிரி நூல்கள் வாங்கிப் படிப்பவர்கள் எண்ணிக்கை இப்போது குறைந்திருக்கிறதென்று.
ஆனால், நகர்பேசி, கணினி, கிண்டில் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் மூலமாக வாசிப்பவர்கள் எண்ணிக்கையும் சரி, வாசிப்பும் சரி முன்னைவிட பலமடங்கு அதிகரித்துள்ளதாகவே நினைக்கிறேன். கண்டும் வருகிறேன். இது காலத்தின் கட்டாயம். தவிர்க்க முடியாது. ஆகவே, இந்த இணையதளம். நன்றி.
– வடிவரசு
*