நற்தொடக்கம் – சில வாழ்த்துகள்

அருமை…. அருமை… வாழ்த்துகள்…. பெருமையாக உள்ளது உங்கள் ஒவ்வொரு முயற்சியும் அதில் உங்கள் மெனக்கெடலும்…. 2022 இனிய ஆண்டாக வாழ்த்துகள்.
முழுமையாக இப்போது தான் பார்த்து முடித்தேன் உங்கள் வெப்சைட்டை. மிக அழகு! கலைநயம்! மென்மேலும் வளர வாழ்த்துகள்.
– காம்கேர் கே.புவனேஸ்வரி
*
Dear Vadivu,
Wishes and greetings.
It is a good move. I also read your poem on trees. Very nice. Continue your creative work. All the best. God bless.
– Fr Ignacimuthu,S.J.
*
சிறப்பு உங்களின் புதிய தளம்.
பலரின் பயனுள்ள களமாக அமைய வாழ்த்துகளுடன் வரவேற்று மகிழ்கிறேன்.
– செந்தில்குமார்,
திண்டிவனம்
*
மகிழ்ச்சி வடிவரசு.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிறந்து பொலிக.
– ரவிசுப்பிரமணியன்
*
அன்புள்ள சகோதரரே,
உங்கள் எண்ணங்கள் மற்றும் எழுத்துகள் அனைத்தும் சமூக உறவுகள் மற்றும் பொறுப்புகளை மேம்படுத்த உதவும்
உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.
– அர்ச்சுனன்,
திருவண்ணாமலை.
*
வணக்கம் அண்ணா.
உங்க ஐயா புத்தகத்தை என் கல்லூரி நண்பர் மூலமா கடந்த வருடம் படிக்க முடிஞ்சது. எனக்கு ரொம்பப் பிடிச்ச புத்தகங்கள்ல அதுவும் ஒன்னாய்டுச்சு.
உங்க புத்தங்கள் எல்லாம் தொடர்ந்து படிக்கனும்னு ரொம்ப ஆசை எனக்கு. ஆனா இப்போ நான் கல்லூரி மாணவி. அதனால எல்லா புத்தகத்தையும் காசு கொடுத்து என்னால வாங்க முடியல. ஆனா நீங்க இப்போ உங்க எழுத்துகளுக்காக இலவச வலைத்தளம் தொடங்கினது என்னமாதிரி இருக்க எத்தனயோ பேருக்கு ரொம்ப பயன் உள்ளதா இருக்கும். முதல் ரெண்டுநாள் வந்த எல்லா பதிவுகளயும் படிச்சேன் அண்ணா. எப்பவும் போலவே சூப்பர்.
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா.
– மேகலா
வேப்பம்பட்டு.
*