தெரட்டி

பூப்படைந்த பெண்களுக்கு சுற்றும் மஞ்சள் நீராட்டு விழா.
[சுற்றம் சூழச் செய்யும் இச்சடங்கினை ‘தெரட்டி சுத்துதல்’ என்பர்.]
[தெரட்டி = தெர்ட்டி = திரட்டி]
– ஏன் மாமா… நாள ராத்திரி பொண்ணுக்கு தெரட்டி சுத்தறம், மறக்காம வந்துரு.
– தெரட்டி சுத்தர வரிக்கும் பொண்ணு வூட்டவுட்டு வெளியப் போவக்கூடாதும்பாங்க பாத்துக்க.
*