ஐபக்கம் – 073 : இடது காலும், வலியும்

#ஜூன்19,2024

மருத்துவர் சொன்னது போல நானும் மதியும் இரவெல்லாம் மாறி மாறி விழித்திருந்து ஐ’யை பார்த்துக்கொண்டோம்.

நல்லவேளையாக 24 மணி நேரத்தில் எந்த அறிகுறியும் இல்லை என்பதால், பெரிதாய் ஆறுதல் அடைந்தோம். இருந்தாலும், அவனது இடது காலில் முட்டிக்கும் தொடைக்கும் இடையில் வீங்கிப்போய் கல் மாதிரி கட்டி இருப்பதைப் பார்த்தோம். அதோடு, உடலில் அங்கே மட்டும்தான் வலி இருக்கிறது. அதுவும், சிறிது அசைந்தாலே துடிக்கிறான் என்றும் கண்டுகொண்டோம். ஆம்.

உடனே மதியிடம், ”இன்னிக்கே மருத்துவர் கிட்ட போய் காட்டலாம்’’ என்றேன்.

அவளோ, ”இல்ல, வேண்டாம். இன்னைக்கு ஒருநாள் பார்த்துட்டு… நாளைக்குப் போய் காட்டலாம்’’ என்றாள்.

‘சரி, இயன்முறை மருத்துவராச்சே… காரணமாதான் சொல்வாள்’ என்று இருக்கும் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சற்று கூடுதலாகவே இன்று ஐ’யை பார்த்துக் கொண்டேன்.

கூடவே, ‘இந்த வலி சீக்கிரம் குணமாக வேண்டும். அதோடு, காலில் எதுவும் ஆகியிருக்கக் கூடாது’ என்றும் மனத்தில் இன்னொரு தடவை பிரார்த்தித்துக் கொண்டேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=