ஐபக்கம் – 066 : புதுச் சொற்கள்

#ஜூன்08,2024
ஐ பிறந்தது முதலே அவனுக்காக அவனைச் சார்ந்து சில புதுச் சொற்களையும், உறவு முறைகளையும், பெயர்களையும் நானும் மதியும் விளையாட்டாக உருவாக்கத் தொடங்கினோம். அதில் முதன்மையானது ஞாயிறு தாத்தா. ஆம்!
காலையில் தினமும் ஐ’யை ஞாயிறொளியில் அதாவது, கதிரவனின் இளவெயிலில் காட்டுவதற்காகக் கூட்டிப் போகும்போது, அவனிடம் ஞாயிறு தாத்தா என்று கதிரவனைக் காட்டிச் சொல்வோம்.
அதேமாதிரி இரவில் வரும் நிலவை திங்கள் பாட்டி என்றும், வீட்டிற்கு வரும் எறும்புகளை எறும்பு பாப்பா என்றும் சொல்வது வழக்கம்.
இந்த வரிசையில் உருவாக்கப்பட்ட சில புதுச் சொற்கள் இதோ :
* வைட்டமின் ஐ – ஞாயிறு தாத்தாவிடம் இருந்து வைட்டமின் டி பெற்றுக்கொண்டு, ஞாயிறு தாத்தாவுக்கு ஐ தருவது.
* ஐக் – ஸ்பைக் போன்று ஐ’யின் தலைமுடிகளை தூக்கிவிடுவது.
* ஐப்பா – ஐயின் அப்பாவான நான்.
* ஐம்மா – ஐயின் அம்மாவான மதி.
* ’ஐ’வியல் – ஐ குறித்து மதி தனது youtube சேனலில் (Ai’s Amma) பதிவிடும் பகுதி.
* ஐபக்கம் – இதோ, இப்போது ஐ பற்றி நான் எழுதிவரும் இந்த நாட்குறிப்பும், அவனுக்காக தினந்தோறும் வீட்டில் திருக்குறள் எழுதும் கரும்பலகையும்.
* ஊசிகா பாட்டி – ஐ’க்கு தடுப்பூசி போடும் செவிலியர் ராதிகா பாட்டி.
* தூரவள்ளி பாட்டி – ஐ பிறந்து இத்தனை நாள் ஆகியும் இன்னும் வந்து பார்க்காமல் தூரத்திலேயே இருக்கும் இசைவள்ளி பாட்டி (மதியின் அம்மா).
*