ஐபக்கம் – 063 : முடிவுக்கு வந்த ஸ்டிரைக்

#ஜூன்04,2024
ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் நானும் மதியும், ‘அப்பாடா…’ என்று பெருமூச்சு விட்டிருக்கிறோம். ஆம்.
ஐ கடந்த ஏழு நாட்களாக மேற்கொண்டு வந்த நர்சிங் ஸ்டிரைக் ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்துவிட்டது. அதனால், பழையபடி ஒன்றுமே நடக்காததுபோல பால் குடிக்கத் தொடங்கிவிட்டான்.
இதில் மதியைக் காட்டிலும் அதிகம் மகிழ்ந்தவன் நானாகத்தான் இருப்பேன். அதுவும், நாளை மறுதினம் வரவிருக்கும் எனது பிறந்தநாளுக்கு (ஐ பிறந்து வரும் முதல் பிறந்தநாள்!) அவன் தந்த பெரும் பரிசாகவே இதனை எடுத்துக்கொண்டேன்.
இதோ, இந்த நிமிடம் வேண்டுவது இதுதான். ‘இனி ஒருபோதும் ஐ, இதுபோல நர்சிங் ஸ்டிரைக் செய்யாமல் இருக்க வேண்டும்.’ ஆம்.
குழந்தை வளர்ப்பு அத்தனை எளிதான காரியம் இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு வந்த எங்களுக்கு, இந்த ஒரு வார காலம் என்பது ஓர் ஆண்டைவிட பெரிது என்றுதான் சொல்ல வேண்டும்.
*