ஐபக்கம் – 046 : உக்கு

#ஏப்ரல்30,2024
வழக்கம் போல ஐ, ஐயை அத்தையிடம் பேசி விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென என்ன நினைத்தானோ, தெரியவில்லை. அத்தையைப் பார்த்து ‘உக்கு’ என்றிட்டான்.
‘இதென்னடா, புது வார்த்தையாக இருக்கிறதே’ எனப் புன்னகைத்துக்கொண்டு வந்து லெக்சிகன் அகராதியில் பார்த்தேன். ‘இலவங்கம்’ என்றது கண்டு வியப்பாக இருந்தது.
கூடவே, ‘எதற்காக ஐ, இந்த வார்த்தையை சொல்ல வேண்டும்?’ என்ற கேள்வியும் எழுந்தன.
பின்னாலேயே, ‘ஒருவேளை இந்த அத்தை… இலவங்கம் மரத்தில் செய்ததாக இருக்குமோ? (அதை எப்படியோ ஐ தெரிந்துகொண்டு சொல்கிறானோ?) இல்லை, நாங்கள் வைத்த பெயர் பிடிக்காததால்… அவனே அத்தைக்கு ‘உக்கு’ என்று புதுப்பெயர் வைத்துவிட்டானோ?’ என்ற பதில் கேள்விகளும் முளைத்தன.
தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
*