ஐபக்கம் – 020 : ஏகாந்தவாசி

#பிப்ரவரி20,2024
ஐ பிறந்த இந்த 52 நாட்களில் நாங்கள் அவனிடம் கண்டு பெரிதாய் வியந்த; மகிழ்ந்த ஒன்று என்றால், அது அவன் எங்கள் இருவரைப் போலவும் ஏகாந்தவாசியாக இருப்பதுதான். ஆம்!
அதனால், நாங்கள் எப்போதும் அவனோடு இருக்க வேண்டியதில்லை; விளையாட, பேச, தூக்க, பாட்டுப் பாட வேண்டியதில்லை. அவன் பாட்டுக்கு வீட்டில் இருக்கும் காற்றாடி, நாட்காட்டி, பொம்மைகள், விளக்கு, அது இது… என்று எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டு (சிலநேரம் அவற்றோடு பேசிக்கொண்டு) படுத்திருப்பான். அல்லது தூங்குவான்.
பசிக்கையில் மட்டும் இரண்டு மூன்று தடவை மதியை பார்த்து வாயில் கை வைத்துக் காட்டுவான். பார்த்துவிட்டு பால் தந்தால் போதும். இல்லையென்றால், லேசாக அழுவான். ஓடிப் போய் தூக்கி பால் கொடுத்தால் போதும். அவ்வளவுதான். அவன் பாட்டுக்கு எதையாவது வேடிக்கை பார்த்து ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருப்பான்.
*