ஐபக்கம் – 014 : கீ பாப்பா

#ஜனவரி20,2024
ஐ’க்கு எங்கள் இருவருக்கு அடுத்தபடியாக நன்கு அறிமுகமானது யார் என்றால், அது ‘கீ பாப்பா’தான்.
‘அது என்ன கீ பாப்பா, யார் அந்த பாப்பா?’ என்று கேட்கலாம். ஐ பிறந்தபோது மருத்துவமனையில் தந்த ‘குழந்தை நல பரிசு பெட்டகத்தில்’ இருந்த மஞ்சள் நிற பொம்மைதான் கீ பாப்பா.
அழுத்தினால் ‘கீ… கீ…’ என்று கத்துவதாலும், ஐ’யின் பெயர் ஓரெழுத்தில் இருப்பது போல அவனது முதல் பொம்மை நண்பனுக்கும் ஓர் எழுத்திலேயே பெயர் வைக்கலாம் என்பதாலும் இடப்பட்ட பெயர்தான் கீ பாப்பா.
ஐ பிறந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் இதோ, இன்று வரையிலும் ஒரு நல்ல நண்பனாய் அவனோடு எப்போதும் இருந்து வருகிறது. நாளை இன்னும் எத்தனையோ அழகழகான; விலையுயர்ந்த பொம்மை நண்பர்களும், நண்பிகளும் வரலாம். ஆனால், அவை இந்த கீ பாப்பா போல வருமா என்பது சந்தேகம்தான்.
*