யாரும்
பிறந்தமேனியில் பூசிய வார்த்தைகள்
பிறப்புறுப்புள்நுழைந்து
தாகம் தணித்தது
தனக்கான ஆவேசத்துடன்
விரல்கள் விழித்துக்கொண்டசைவுற
திசைகள் மறந்து
தீயெனப்பற்றிக்கொண்டது
தனிமை தேகம்
இதுவரைக்குமான
இருப்பின் கணங்களை
கால்களுணர்ந்தபோது
கண்கள் பேசமறந்தது
வானத்தை விழுங்கி
மேலும் மேலுமாய்
மீண்டும் மீண்டுமாய் தொடர்ந்திடும்
வீழ்விளையாட்டில்
ஆடைகள் போல
பெயர்களுக்கு வேலையில்லை
சுரந்திடும் எனினும்
ஓர்மைத் துளியில் பூத்த
அவர்களைப் போன்று
இன்னோரவர்களுக்கு
வருத்தம்தான்
யாருமாய் இல்லாதது
யாரும்