யாரோ
வார்த்தைகளை வெள்ளையாகயெடுத்து
வண்ணத்தில் குழைத்தபோது
சில சாம்பல் நிறமும்
சொல்லமுடியாத நிறம் பலவும் கொள்ள
ஈர்க்குச்சியில் சிக்கிய பேனானேன்.
விடியலில் தொலைந்த நிலவுடன்
தொடர்ந்திட எண்ணி
தேய்ந்தபோது
மாமர சருகுகளில் தடுக்கலுற்றேன்
குலவிக் கடித்த கன்னத்தை
கைகளால் அழிக்கப் பார்த்து
பனங்கருக்கின் கோபத்துக்குள்ளானேன்
தத்தித்தத்தி பாதைகளில் விழுந்த எனக்கு
முதல் தடவையாக
பிரிக்கத்தெரிந்தது
காதலை காமத்திலிருந்து
இதுநாளைய வலிகளை
வாரிச்சுருட்டியபோது
யாரோவாகிப்போயிருந்தேன்
ன்’நா’ன்