சும்மை

அற்றைப்பாடல் முதல்வரியானவருக்கு
கொள்ளைப் பிரியம்
வலிகள்மீது
சொற்கள் சேர்த்து கூடுகட்ட நினைத்து
விழுந்துபோன சருகுநாளின்
சொன்னபோது
தேங்கிய குட்டையில் தெரியும்
மரமாக அசைந்தது அலையுள்ளம்
சூடுகொட்டை தேய்த்துப் புன்னகைக்க
சிறகுடைந்த பறவையின் வேதனை
கண்முன் பூத்தபோது
வேலியில் சிக்குண்ட ஓணானாய்
துடிதுடித்தது குறைநெஞ்சம்
வெறுப்பு மொத்தமாய் விழுங்கி
புள்ளியானபொழுதில்
வானம் பூமி தன்வயின்தெரிய
மிஞிறென ரீங்கரித்தேன்
இல்லா சும்மைகொண்டு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=