சொல்லன்றி எதுவுமற்றவன்! – 320

இன்னொரு பக்கம் நகர்பேசியும் கையுமாகத் திரியும் இளம் தலைமுறையை கவனிக்கிறீர்களா?

கவனித்துதான் வருகிறேன். இந்தளவுக்கு தேவையைத் தாண்டி பயன்படுத்தும், அதற்கு அடிமையாகும் இளம் சமூகம் எனக்குத் தெரிந்து நம் இந்தியச் சமூகமாகத்தான் இருக்கும். நகர்பேசி இல்லாமல் வாழவே முடியாது என எண்ணும் அளவுக்கு அதன் மீதான போதை அதிகரித்துவிட்டது. பலரையும் பார்க்கப் பரிதாபமாக உள்ளது.

முன்பெல்லாம் ரயில் பயணங்களில் அருகிலும், எதிரிலும் இருப்பவர்கள் மற்றவர்களிடம் வெகு இயல்பாகப் பேசிக்கொண்டு வருவார்கள். மிகச் சிலர் மாத்திரமே புத்தகங்களோ, வார இதழ்களோ வாசித்து வருவார்கள். ஆனால், இன்றைக்கு அந்நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 99 சதவிகிதம் பேர்கள் கையில் நகர்பேசியை வைத்துக்கொண்டு குனிந்தபடி அதிலேயே மூழ்கியுள்ளார்கள். ஒரு மணிநேரம் இல்லையென்றாலும் வாழ்வே முடிந்துவிட்டதாக; நின்றுவிட்டதாக எண்ணித் துடிக்கிறார்கள். இதெல்லாம் எத்தகைய அறியாமை என்று தோன்றும்.

ஆரம்பம் முதலே நகர்பேசி விஷயத்தில் மிகத் தெளிவாகவே இருக்கிறேன். ஆகையால், அதனை என் தேவைக்கு அதாவது, எனக்குத் தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் அது என்னை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஆம். இதில் உறுதியாக இருப்பதால்தான், நகர்பேசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னால் எப்போதும் ஒரேமாதிரி இருக்கமுடிகிறது.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 319

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=