சொல்லன்றி எதுவுமற்றவன்! – 235

கிராமத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவர் நீங்கள். அப்படி இருந்தும் ஏன் இந்த நகர வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்டீர்கள்?

(எதையோ தனக்குள் யோசித்தவாறு தலையை மேலும் கீழும் மெல்லமாக அசைத்தவர்)

காலம்தான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது. கிராமத்தில் இருக்கும் உயிர்ப்பு இந்த நகரத்தில் முழுதாக இல்லை என்றாலும், வேறு விதமான சிறுசிறு உயிர்ப்புகள் இங்கும் ஆங்காங்கே இருப்பதை பார்க்க முடிகிறது.

சிறுவயதில் மண்ணோடும், மக்களோடும், மரஞ்செடிகொடிகள், ஆடு, மாடு, மலை, கிணறு, ஏரி, குட்டை, கால்வாய், ஆறு, ஓடை என கிராமத்தின் அத்தனை அங்கத்தோடும் பின்னிப் பிணைந்து வாழ்ந்திருக்கிறேன். அப்பிணைப்புதான் இன்றுவரை இங்கே இந்த நகரத்தில் வாழும்போதும் என்னோடு ஒட்டிக்கொண்டு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அது இங்குள்ள கிராமத்தின் சிறுசிறு தடங்களை காணும்போது என்னை இன்னும் உயிர்ப்பு கொள்ளச் செய்கிறது.

ஒருவேளை என்றாவது இங்கே கிராமத்தின் தடங்கள் முற்றாக மறைந்து இல்லாமல் ஆகும்போது இந்நகரத்தை விட்டு நான் போக நேரலாம். அதையும் அந்தக் காலம்தான் முடிவு செய்யும் என நினைக்கிறேன்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 234

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=