சொல்லின்றி எதுவுமற்றவன்! – 207
மிகச் சுருக்கமாக, ஏன் இந்த அகராதி அத்தனை முக்கியமானது என்று சொல்லமுடியுமா?
இன்றைக்கு எங்கள் கிராமத்தில் வாழக்கூடிய மிக மூத்தவரான என் ஐயாவுக்கு செப்டம்பர் ஒன்று வந்தால் 99 வயது ஆகப்போகிறது. அம்மாவுக்கு 90 நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் பேசும் பல சொற்களுக்கு என் அண்ணன் குழந்தைகள் அர்த்தம் தெரியாமல் முழிக்கிறார்கள். ஆனால் நானோ, என் தலைமுறையினரோ அந்த வார்த்தைகளை எளிதில் புரிந்துகொள்கிறோம். எனினும் அவற்றை அதிகம் பயன்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் அவர்களோடு முடியப்போகும் பலநூறு வார்த்தைகளை காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
இதன் மூலமாக முன்பே சொன்னது போல பலநூறு தமிழ் சொற்கள் தமிழுக்கு கிடைக்கப் போகிறது. அதனால்தான் இந்த அகராதி மிக முக்கியமானது என அங்கீகரித்து, அதற்காக ‘ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது’க்கு என்னை தேர்வு செய்திருக்கிறார்கள்.
[இன்னும்]
*