சொல்லின்றி எதுவுமற்றவன்! – 161
உங்கள் திருமணத்தில் என் உட்பட பலரையும் வியத்திய ஒன்று, நீங்கள் எப்போதும் போல மிக எளிமையாக இருந்தது…
(கேள்வியை முடிக்கும் முன்னமே பேசத் தொடங்கியவர்) எப்போதும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் என் இயல்பும் கூட.
திருமணம் என்பது என் பொருத்தவரை வாழ்வில் நடக்கக்கூடிய அதி அழகான; மிக முக்கியமான நிகழ்வு. அந்நிகழ்வில் போய் நாம் நாமாக நமக்குப் பிடித்தது போல இல்லாமல், ஊருக்காக வெற்று வேஷம் போட்டு யாரோவாக இருப்பது வேடிக்கையாகத் தோன்றும்.
விகடனில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் அடிக்கடி வருத்தத்தோடு சொல்வார். ‘கல்யாணத்துக்கு வாங்கின கோட்ட, அன்னைக்கு ஒரே ஒரு தடவைதான் போட்டேன். பேசாம அந்தக் காசுக்கு இன்னும் நாலு செட்டு துணி வாங்கி இருக்கலாம்.’
அதேபோல இன்றைக்கு நடக்கக்கூடிய 99 சதவிகித திருமணங்கள், அதன் அர்த்தமின்றி வெறும் கடமைக்காகவும், பெருமைக்காகவுமே நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக என் திருமணம் இருந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். அதனால்தான் எந்நாளும் போல எனக்குப் பிடித்தமாதிரி இருந்தேன்.
[இன்னும்]
*