சொல்லின்றி எதுவுமற்றவன்! – 139

முன்னுரையில் குறிப்பிட்டிருப்பீர்கள். தொடராக வெளியிடக் கேட்டு பிரபல ஊடகம் ஒன்றை அணுகியதாக. இத்தனை தரமான, அவசியமானக் கட்டுரை தந்தும் ஏன் அவர்கள் வெளியிடவில்லை?

ஹாஹா… எனக்குத் தெரிந்து ஒரே காரணம், நான் ஊடகத்தில் பணிபுரிந்தவன் என்பதுதான்.

அதேநேரம், இன்றுவரை அவர்கள் வெளியிட மாட்டேன் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. ‘காத்திருங்கள், நேரம் வரும்போது தொடங்கிவிடலாம்’ என்றார்கள். சொல்லி மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அவர்களுக்கு நேரம் வரவில்லை. ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அது வரவே வராது. ஹாஹா…

இன்னொரு முக்கியமான விஷயம். ஊடகங்களில் சிலநேரம் ஒரு படைப்பாளியையும், அவரது படைப்பையும் நிராகரிக்க ‘காத்திருங்கள்’ என்பார்கள். நல்லவேளை, அவ்வாறு சொல்லப்பட்டதாக சீக்கிரமே புரிந்துகொண்டேன். இல்லையென்றால் இன்றுவரை இந்நூலை எழுதியிருக்க மாட்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 138

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=