சொல்லின்றி எதுவுமற்றவன்! – 130
இந்த இடத்தில் ஒரு கேள்வி. இதை ஆதங்கம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இத்தனை அழகான, அர்த்தப்பூர்வமான வரிகளை எழுதிய நீங்கள் கூட ஏன், ‘டும்மா டக்கா, டிசாக்கோ, டர்னக்கா, ஹக்பிக் ஹக்பிக், லசா லசா…’ போன்ற அர்த்தமற்ற வார்த்தைகளை எழுதவேண்டும்?
(அருகில் இருந்த மா மரத்தை பார்த்தபடி சில நொடிகள் மௌனமாக இருந்தவர், சட்டென்று திரும்பி என் முகம் பார்த்து)
இதை மிக முக்கியமானக் கேள்வியாகப் பார்க்கிறேன். முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல நல்ல வார்த்தைகளையும், வரிகளையும் பரவலாக எடுத்துப் போக இதுபோன்ற அர்த்தமற்ற வார்த்தைகளை ஆங்காங்கே மிக சொற்ப எண்ணிக்கையில் பயன்படுத்துவது ஒன்றும் தவறு கிடையாது. அதேநேரம், அதையே முழுதாக செய்து மொழியையும், பாடலையும் சிதைப்பது என் பொறுத்தவரை பெரும் தவறு, மொழிக்கு செய்யும் துரோகம் என்றுதான் சொல்வேன்.
[இன்னும்]
*