சொல்லின்றி எதுவுமற்றவன்! – 111
முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக… இதே வருத்தம் அதாவது, ஐயாவிடம் இருந்து நீங்கள் யாரும் மருத்துவம் கற்காதது, அவருக்கும் இருந்திருக்கும்தானே?
நிச்சயம் இருந்திருக்கும்; இருக்கும்.
இது தொன்றுதொட்டு தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு வருவது. அந்த வகையில் தம் முன்னோரிடம் இருந்து தான் பெற்றதை, தனது அடுத்த தலைமுறையிடம் கைமாற்றவே அவர் எண்ணியிருப்பார். அது நடக்காதது வருத்தத்தைதான் தந்திருக்கும்.
அதேநேரம், முழுவதும் தந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், என் மூன்றாவது அண்ணன் அவரிடம் இருந்து சில மருத்துவங்களை கற்றிருக்கிறார். நானும் மிக சொற்பமானதை கற்றிருக்கிறேன். இதெல்லாம் அவருக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும்; இருக்கும் என்றே நினைக்கிறேன்; நம்புகிறேன்.
[இன்னும்]
*