நிமுட்டாம்பழம்

(பழம் பிழிவதுபோல்) நிமிட்டி வலிக்குமாறு செய்வது.
[அதிலும் குறிப்பாக ‘biceps muscle’ என்று சொல்லக்கூடிய மேற்கை இருதலைத்தசையில் செய்வது.]
[நிமுட்டாம்பழம் = நிமிட்டாம்பழம் = நிமட்டாம்பழம்]
– அறிவியல் வாத்தியாருகிட்ட நிமுட்டாம்பழம் வாங்குறதுக்கு… பேசாமப் படிச்சி பாஸ் மார்க்கே வாங்கிறலான்டா.
– வெளாட்டுப் புள்ள எதோ தெரியாம நிமட்டாம்பழம் பண்ணிட்டுகீறான்… இந்த ஒருவாட்டி வுட்ருங்க.
*