சொல்லின்றி எதுவுமற்றவன்! – 109
அந்தப் பாம்பு என்றாவது கடித்துவிடும் என்ற அச்சம் யாருக்குமே இல்லையா?
(சட்டென ‘இல்லை’ என்று தலையாட்டிவிட்டு, சில நொடிகள் கழித்து)
மிகச்சிறுவனாக இருந்த எனக்கு, அதிலும் அந்தப் பாம்பை முதல்தடவை கண்டுவிட்டு நடுநடுங்கிப் போய் ஐயாவிடம் சொன்ன சில தினங்களுக்கு, ‘எங்கே வந்து என்னை கடித்துவிடுமோ’ என்று அச்சமாக இருந்தது. ஆனால், அந்த எண்ணம் ஐயா சொன்ன நம்பிக்கை வார்த்தைகளால் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது.
இந்த பூமி அனைத்து உயிர்களுக்குமானது. இந்த உயரிய பாடத்தை உணர்ந்து, அந்தப் பாம்பு எங்களை ஒன்றும் செய்யாது என்று நாங்கள் நம்பினோம். அப்பாம்பும் அவ்வாறு நம்பியதால்தான் எந்த பயமும் இல்லாமல் அத்தனை ஆண்டுகள் எங்களுடன் ஒரே வீட்டில் இருந்தது; வாழ்ந்தது.
[இன்னும்]
*