சொல்லின்றி எதுவுமற்றவன்! – 099
இது இன்று மட்டுமல்ல… எப்போதும் இருக்கும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது. சரி, உங்கள் ‘முகங்கள்’ நூலை வாசித்துவிட்டு வந்த விமர்சனங்களில், தனித்துவமான அல்லது மனத்துக்கு நெருக்கமான ஒன்றை சொல்லுங்கள்…
ஒருநாள் முகம் தெரியாத ஓர் இளம் பெண்ணிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி இன்ஸ்டாகிராமில் வந்திருந்தது. திறந்து பார்த்தேன். ‘உங்கள் முகங்கள் புத்தகம் இப்போதுதான் படித்து முடித்தேன். பல முகங்கள் அப்படியே என் மனத்தில் பதிந்துவிட்டது. நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை இந்த புத்தகம் எனக்கு தந்திருக்கிறது. இது அருமையான புத்தகம். நானும் உங்களைப் போன்று நிறைய மனிதர்களை என் வாழ்வில் சந்திக்க விரும்புகிறேன். இன்னும் எழுதுங்கள்’ என்று நீண்டது.
படித்ததும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இதுதான்; இப்படித்தான் இந்த நூலுக்கான அங்கீகாரம் கிடைக்கும்; சென்று சேரும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
[இன்னும்]
*