சொல்லின்றி எதுவுமற்றவன்! – 096

இந்தக் கேள்வி இந்த இடத்தில் தேவைதானா தெரியவில்லை. உங்கள் முகங்களில் யாராவது நீங்கள் அவர் பற்றி எழுதியதை வாசிக்க வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு வாசித்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

ஹாஹா… (சத்தமாக சிரிக்கிறார்) சந்தேகமே வேண்டாம். இது அவசியம் தேவையான கேள்விதான்.

எனது முகங்களில் அறிமுகன் நான் முகநூலில் எழுதியபோதே வாசித்துவிட்டதாக நினைக்கிறேன். எனினும் அவர் அதைப் பற்றி எதுவும் என்னிடம் சொல்லவில்லை. மாறாக, நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக குறுஞ்செய்தி அனுப்பி, ‘தனக்கு நூலின் ஒரு பிரதி வேண்டும்’ என்று கேட்டார். அவர் கேட்ட நேரம் பிரதி கையில் இல்லை. ‘வந்ததும் சொல்கிறேன்’ என்றேன். ‘சரி’ என்றார். பிறகு வந்ததும் சொன்னேன். எந்த பதிலும் இல்லை.

மற்ற முகங்களில் நூலகனுக்கு வாசிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர் தினந்தோறும் செல்லும் அதே கன்னிமாரா நூலகத்தில் முகங்கள் புத்தகம் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அதை எடுத்து அவர் வாசிக்க மாட்டார். ஏகாந்தரிடம் நானாக தந்தால் நிச்சயம் வாசிப்பார். மற்றபடி மீயாய் போன்ற சில முகங்கள் வாசிக்க மிக குறைந்த வாய்ப்புதான் இருக்கின்றன.

ஒருவேளை அவர்கள் வாசித்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 095

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=