சொல்லின்றி எதுவுமற்றவன்! – 086
இது அவர்களுக்கு (சுரேஷ் – அனு) தெரியுமா?
தெரியும். ஆனால், அதை அவர்கள் தெரிந்துகொண்ட தருணம் ஒரு கவிதை போல என் கண் முன்னால் இப்போதும் இருக்கிறது.
2020 ஜனவரி 27 ஆம் தேதி, பெரம்பலூரில் தாம் கட்டிய இல்லத்தின் புதுமனை புகுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். சென்று இருவரையும் ஒருசேர நிறுத்தி நூலை அவர்களிடம் கொடுத்தேன். பெற்றுக்கொண்டு ‘நன்றி’ சொன்ன சுரேஷ், அதை தனது மனைவியிடம் தந்துவிட்டு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அடுத்த சில நொடிகளில் அட்டைப்படத்தில் இருந்த தம் பெயரை கண்ட அவர் மனைவி அனு மிகவும் மகிழ்ந்து நெகிழ்ந்து போய் அவரை கூப்பிட்டுக் காட்டிவிட்டு, என்னிடம், ”உங்க அண்ணன் கூட இப்படி எல்லாம் பண்ணினது கிடையாது. நீங்க பண்ணி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமையாவும் இருக்கு. நன்றி’’ என்றார்.
சுரேஷ் அவர் பங்குக்கு, ”டேய், என்னடா இதெல்லாம்?’’ என்று கேட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சொல்லப்போனால், அவர்களை விட அப்போது அதிகம் மகிழ்ந்தவன் நான்தான்.
[இன்னும்]
*