சொல்லின்றி எதுவுமற்றவன்! – 083
நாஞ்சில் நாடன் தவிர்த்து வேறு எந்த மூத்த எழுத்தாளர்கள் இதுபோன்ற நினைத்திராத வார்த்தைகள் சொன்னார்கள்?
எழுத்தாளர் பொன்னீலன் ஐயா அவர்கள், ஒருநாள் நான் எங்கேயோ வெளியில் சென்றுவிட்டு மின்சார ரயிலில் அறைக்கு வந்துகொண்டிருக்கையில் அழைத்திருந்தார்.
தெரியாத எண்ணில் இருந்து வந்த அந்த அழைப்பை எடுத்ததும், ”வடிவரசு, நான் பொன்னீலன் பேசுகிறேன். உங்கள் ஐயா புத்தகம் படித்தேன். ரொம்ப ரொம்ப ரொம்ப பிரமாதமா இருந்தது. உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்திட்டே இருக்கலாம். குறைந்தது நானூறு வருஷம் இந்த புத்தகம் உயிருடன் இருக்கும். வாழ்த்துகள் வடிவரசு’’ என்றார். கேட்டதும் கண்கலங்கி விட்டேன்.
இப்படி இன்னும் சில எழுத்தாளர்களிடமிருந்தும், எழுத்தாளர் அல்லாதவர்களிடமிருந்தும் அன்று தொடங்கி இன்று வரையில் வாழ்த்துகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இனியும் அது வரும் என்றே தோன்றுகிறது.
[இன்னும்]
*