அன்றாடக்காய்ச்சி

அன்றாட உணவுக்கு கூலிவேலை செய்து (கஞ்சோ, கூழோ காய்ச்சி) உண்பவர்.

[அன்றாடக்காய்ச்சி = அன்னாடம் காய்ச்சி = அன்னாடங்காச்சி]

– இன்னொரு வாட்டி அந்த அன்னாடங்காச்சி கூட சேந்துனு சுத்தறத பாத்தன்னு வைய்யி… அவ்ளோதான், பாத்துக்க.

– எம்மாம் சொத்துபத்து இருந்து என்ன புண்ணியம்… ஒர்நாளு கூட அந்த அன்னாடம்காய்ச்சிங்க மாரி நிம்மிதியா தூங்கமுடில.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=