சொல்லின்றி எதுவுமற்றவன்! – 071

விமர்சனங்கள், மதிப்புரைகள் வந்த அளவுக்கு பெரிதாக விருதுகள் எதுவும் (ஐயா நூலுக்கு) வரவில்லையே?

(சிரிக்கிறார்) விருது என்பது நம் படைப்புப் பயணத்தில் சிறு இளைப்பாறல், தட்டிக்கொடுத்தல் மட்டும்தான். அதைவிட மிகப்பெரிய அங்கீகாரம் என் பொருத்தவரை யாரென்று தெரியாதவர்கள் நம் படைப்பை ஏந்திக் கொண்டாடுவதில்தான் இருக்கிறது. அவ்வகையில் இதுவரை ஐயா நூலுக்கு வந்திருக்கும் பலநூறு விமர்சனங்கள், மதிப்புரைகளில் மேலதிகமானவை யார் என்று தெரியாதவர்களிடமிருந்து வந்தவைதான்.

இன்னொரு முக்கியமான விஷயம். இங்கே தரப்படும் பல விருதுகள் படைப்புகளுக்காக, அவற்றின் தரத்துக்காக தரப்படுவதில்லை. படைப்பாளர்களால் வாங்கப்படுகின்றன. படைப்பாளரைப் பார்த்து கொடுக்கப்படுகின்றன.

இதை இவ்வாறு சொல்லலாம். நூற்றுக்கு 95 விருதுகள் இன்றைக்கு தகுதியற்றவர்களையே, தரமற்ற படைப்புகளையே போய் சேருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், அன்பையும் பெற்ற ‘ஐயா’ நூலுக்கு விருதுகள் கிடைக்காதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 070

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=