அடுப்புத்தட்டு

அடுப்பை ஒட்டியுள்ள சிறு சுவர் போன்ற பகுதி.
[அடுப்புத்தட்டு = அடுப்பந்தட்டு]
– அடுப்புத் தட்டுமேல சொம்ப வக்காதன்னு எத்தன வாட்டி சொல்றது… இப்பப் பாரு ஒரே கரியா கீது.
– இப்பதான் அடுப்புத் தட்ட பூசி மொழுவன மாரி கீது… அதுக்குல்ல அடுத்த பொங்குலே வந்துருச்சி.
*