சொல்லின்றி எதுவுமற்றவன்! – 069
சரி, உங்கள் எழுத்துப் பயணத்தின் அடுத்த மைல்கல்லான புத்தகங்கள் பற்றி இனி பேசலாம். உங்கள் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ தமிழ் இலக்கியத்திற்கு புதுவரவு. எவ்வாறு இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்று தோன்றியது?

இந்தக் கேள்விக்கான பதிலை ‘ஐயா’ நூலின் என்னுரையிலேயே எழுதியிருப்பேன் என்றாலும், இங்கே மேலோட்டமாக சொல்கிறேன். முதலில் இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற எண்ணமே கிடையாது. ஐயாவையும் அம்மாவையும் விமானத்தில் கூட்டிப்போய் வந்ததை ஒரு நீள் கட்டுரையாகவும், ஐயா ஒருநாள் தற்செயலாக என்னிடம் தன் இறப்பு குறித்து பேசியதை இன்னொரு சிறு கட்டுரையாகவும் எழுதி முகநூலில் பதிவிட்டதை வாசித்த சிலர், ‘உங்க அப்பா – மகன் உறவு ரொம்பவே வித்தியாசமா இருக்கு. நீங்க ஏன் இதையே ஒரு நூலா எழுதக்கூடாது?’ என்று கேட்க, அந்த கேள்வியில் இருந்துதான் இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற எண்ணமே வந்தது.
நாம் திட்டமிட்டுச் செய்யும் ஒன்றைவிட எந்தவித திட்டமிடலும் இல்லாமல் நம்மைக்கொண்டு காலம் நிகழ்த்திக்கொள்ளும் ஒன்று கூடுதல் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். அவ்வகையில் இந்நூல் என்னைக் கொண்டு காலம் நிகழ்த்திக்கொண்ட ஒரு படைப்பு என்றுதான் சொல்லவேண்டும்.
[இன்னும்]
*