சொல்லின்றி எதுவுமற்றவன்! – 068
உங்கள் ‘ஏலேலோ பாட்டு’ தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து தனிப்பாடல்கள் பற்றியும் பேசிவிட்டோம் என நினைக்கிறேன்.
(சொல்லி முடிக்கும் முன்னமே ‘இல்லை’ என தலையாட்டியவர்) இன்னும் கலர்ஸ் தொலைக்காட்சிக்காக எழுதிய ‘பறக்குதே’, ‘தாத்தா’ குறும்படத்துக்காக எழுதிய ‘ஓர் குழந்தை இங்கு’, ‘சிங்கப்பூர் தீபாவளி’, ’ஐயா – 96’, கொரோனா முதல் வீடடைவு காலத்தில் உருவாக்கி வெளியிட்ட ‘நாம் வெல்வோம்’ மற்றும் ‘திருந்து’ போன்ற பல தனிப்பாடல்கள் பற்றி பேசவில்லை.
என்றாலும், இவற்றில் ‘பறக்குதே’ பாடல் பற்றி மட்டும் இங்கே சிலவற்றை சொல்லலாம் என நினைக்கிறேன். இந்தப் பாடலுக்கான சூழலை என்னிடம் சொல்லி, பாடல் வரிகளை பெற்றவர் நான் பெரிதும் ரசித்துப் பார்த்த குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் [, சமீபத்தில் வெளியான ’திருச்சிற்றம்பலம்’] போன்ற படங்களின் இயக்குனர் மித்ரன் ஜவகர் அவர்கள்.
இது ஒருபக்கம் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்தப் பாடலை பற்றி நினைக்கும் போதெல்லாம் வருத்தப்பட செய்த ஒன்று, இப்பாடலை வெளியிட்டவர்கள் வேண்டுமென்றே எங்கள் பெயர் போடாமல், உடன் வெளியான பாடல்கள் எழுதியவர்கள், பாடியவர்கள், இசையமைத்தவர்கள் பெயர்களை மட்டுமே போட்டு வெளியிட்டதுதான்.
இது பற்றி இன்னும் விரிவாகப் பேசலாம் என நினைத்தாலும், இப்போதைக்கு வேண்டாம் என்றே தோன்றுகிறது.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 067
https://www.facebook.com/ColorsTvTamil/videos/1033546756770653