சொல்லின்றி எதுவுமற்றவன்! – 058
உங்கள் முகநூல் பதிவொன்றில் வாசித்ததாக நினைவு. இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ஒரு சிறப்புக் குழந்தை உங்களை பார்க்க விரும்பி வந்து பார்த்ததாக எழுதியிருந்தீர்கள்.
ஆமாம். காட்சிப் பதிவின்போது பாடலை திரும்பத் திரும்பக் கேட்ட ஒரு சிறப்புக் குழந்தை ஒளிப்பதிவாளரிடம், ‘இதை எழுதினது யாரு? அவரை நான் பார்க்கணும்’ என்று அடிக்கடி கேட்டிருக்கிறது. அவரும், ‘பாடல் வெளியீட்டின்போது வருவார். காட்டுகிறேன். அப்போது பார்க்கலாம்’ என்றிருக்கிறார்.
சரியாக பாடல் வெளியிட்டு விழா மேடையில் நான் நின்றுகொண்டிருக்கும்போது, என்னைக் கண்டு ஓடிவந்து என் கையை (எழுதிய கையை) அழுந்தப் பிடித்துக்கொண்டு, எதுவும் பேசாமல் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வெறுமே புன்னகைத்திருந்துவிட்டு, தான் எனக்காக தன் கைகளால் செய்த கால்மிதியை (Footmat) அன்புப் பரிசாக தந்துவிட்டு ஓடிப்போனது, பெரும் மகிழ்ச்சியில் நெகிழ்த்தி கண்கலங்க வைத்தது.
இப்படி இன்னும் எத்தனையோ நெகிழ்வான சம்பவங்களை நிகழ்த்திய பெருமை இந்தப் ‘பேரன்புடன்’ பாடலுக்கு உண்டு.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 057