சொல்லின்றி எதுவுமற்றவன்! – 054
உங்கள் பதில் ஒருவகையில் ஆச்சர்யமாகவும், இன்னொரு வகையில் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எல்லோரும் யாருக்காக பாடலை உருவாக்குகிறோமோ அவர்தான் முதலில் அப்பாடலை கேட்கவேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக உள்ள எல்லா வழிகளையும் தேடித் தேடி முயன்றும் பார்ப்பார்கள். ஆனால் நீங்களோ… பாடலை வெளியிட்டுவிட்டு, ‘அவர் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன’ என்பதுபோல அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டத்தாக சொல்கிறீர்கள்.
(கேள்வியை முடிக்கும் முன்னமே இடைமறித்து) ஒரு படைப்பாளியின் பணி படைப்பை உருவாக்குவதுதானே? அப்படியிருக்கையில் ஒரு படைப்பை உருவாக்கிவிட்டு, அதைக் கொண்டுபோய் எல்லா இடங்களிலும் கூவிக் கூவி விற்று, அதனால் சுயலாபம் அடைய நினைக்க நான் ஒன்றும் வியாபாரி இல்லையே.
அதேநேரம் எந்தளவுக்கு ஒரு படைப்பாளி தன் படைப்பு போய் சேர முயற்சிக்க வேண்டுமோ, அந்த அளவுக்குதான் என்னால் செய்யமுடியும். அதற்குமேல் செய்தால் நான் படைப்பாளியாய் இருக்கமுடியாது, வியாபாரி ஆகிவிடுவேன்.
நான் எப்போதும் ஒரு படைப்பாளியாக இருக்கவே விரும்புபவன். படைப்பாளியாகவே இருப்பேன்.
[இன்னும்]
*