சொல்லின்றி எதுவுமற்றவன்! – 053
இதை அவர் (ஏ.ஆர்.ரஹ்மான்) கேட்டிருப்பாரா?
(தெரியாது என்பதுபோல தலையாட்டிவிட்டு) கேட்டிருக்கலாம். கேட்காமலும் போயிருக்கலாம்.
எங்கள் நோக்கம் அவர் கேட்கவேண்டும் என்பதல்ல… அவருக்காக செய்யவேண்டும் என்பதே. அதனால் அதை வெளியிட்டதோடு, அதிலிருந்து வெளியில் வந்து அடுத்தடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.
ஒன்றுமட்டும் அப்போது உறுதியாக எண்ணினோம். அவர் கேட்டால் நிச்சயம் மகிழ்வார். அந்த மகிழ்ச்சி எங்களுக்குப் போதும். அதுதான் அவர் இந்த 25 ஆண்டுகால இசை வாழ்வில் எங்களுக்குத் தந்த நம்பிக்கைக்கும், உற்சாகத்திற்கும், ஊக்கத்துக்கும், படைப்புகளுக்கும் நாங்கள் அவருக்குத் தந்த மிகச் சிறிய அன்புப் பரிசு. அவ்வளவுதான்.
[இன்னும்]
*