சொல்லின்றி எதுவுமற்றவன்! – 050

விகடன் கடைசியாக அல்லது அதற்கு முன்பாக வெளியிட்ட உங்களது ‘காலம் கடந்துடிச்சு’ பாடல் பற்றி சொல்லுங்கள்…

‘காலம் கடந்துடிச்சு’ எங்கள் மண்மொழியில் நான் முதன்முதலில் எழுதி வெளியான உயிர்ப்பு மிக்கப் பாடல்.

மழையின்றி விவசாயம் பொய்த்துப்போன சமயத்தில், தன் கண்ணில்படும் அனைத்தும் காய்ந்தும்; செத்தும் கிடப்பதைக் கண்டு தாங்கமுடியாமல், மனவேதனையில் உடைந்து அழும் ஒரு வயதான விவசாயியின் குரலாக எழுதப்பட்டது. ஒவ்வொரு வரியிலும் வலி மிகுந்திருப்பது.

அதிலும் குறிப்பாக,

பசியில வரும் பட்சி

பசி போக்கத் தெரியல

வெதக்க வச்ச நெல்ல

தந்துப்புட்டன் வழியில்லயே…’

என்ற வரிகள் எழுதிய என் தொடங்கி, கேட்ட பலரையும் கலங்க வைத்தது.

இப்பாடல் வெளியான சமயத்தில் ஒருநாள் ஊருக்குப் போயிருந்தபோது, என் ஐயாவிடம் போட்டுக் காட்டினேன். கேட்டுவிட்டு கம்மிய குரலில் சொன்னார். ”அப்டியே நம்மூரு வார்த்தங்கள வச்சி எழுதிகீற. கேக்ககேக்க என்னமோ பண்ணுது’’.

அவரை மனத்தில் நிறுத்தியே இந்தப் பாடலை எழுதினேன் என்றாலும், அதை அவரிடம் சொல்லவில்லை. எனினும் அவரது வார்த்தைகளை எனக்கும், எனது பாடலுக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரமாகவே எடுத்துக்கொண்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 049

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=