சொல்லின்றி எதுவுமற்றவன்! – 049

உங்கள் தனிப்பாடல்களில்மனிதா… மனிதா…’,  ‘ஓ, மக்களே!’,எஸ்குஸ்மீ பி.எம் சார்’,காலம் கடந்துடிச்சு’,  ‘ரஹ்மான் – 25’ போன்ற ஐந்து பாடல்களை நீங்கள் பணிபுரிந்த விகடன் வெளியிட்டது. ஏன் அதற்கடுத்தப் பாடல்கள் எதையும் அது வெளியிடவில்லை?

(சிரிக்கிறார்) இந்தக் கேள்வியை நீங்கள் அங்கேதான் போய் கேட்கவேண்டும்.

இருந்தாலும் சிலவற்றை சொல்ல நினைக்கிறேன். முதலில் எனது மூன்றாவது பாடலான ‘மனிதா… மனிதா…’ பாடலை நாங்கள் உருவாக்கியதும் விகடனுக்கு அனுப்பி, ”இந்தப் பாடலை நீங்கள் வெளியிடமுடியுமா?’’ என்று கேட்டேன். கேட்டுவிட்டு வெளியிட சம்மதித்தார்கள். பாடலுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

அதைத் தொடர்ந்து நான்கு பாடல்களை ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் வெளியிட்டவர்கள் ஏனோ, அதற்கடுத்து வெளியிட மறுத்துவிட்டார்கள். நானும் இரண்டு மூன்று தடவை வேறுவேறு பாடல்களை அனுப்பிக் கேட்டுப்பார்த்தேன். ம்…ஹூம்.

பெரிதாக காரணமெல்லாம் எதுவும் சொல்லவில்லை. என்றாலும், ‘எதுக்கு இவனோடப் பாட்ட தொடர்ந்து வெளியிட்டு… இவன பெரிய ஆளா ஆக்கிவிடணும்?’ என்று அங்கிருந்த சில ‘நல்ல’ உள்ளங்கள் நினைத்திருக்கலாம்.

நான் எப்போதும் ஒருவிஷயத்தில் தெளிவாக இருப்பவன். எதையும் செய்வதற்கு முன்பாக ‘அது நடந்தால் சந்தோஷம். இல்லையென்றால் இன்னும் சந்தோஷம்’ என்றுவிட்டு அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கப் போய்விடுவேன். இதிலும் அதுதான் நிகழ்ந்தது. அதோடு அதை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 048

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=