சொல்லின்றி எதுவுமற்றவன்! – 037

மெரினா போராட்டக் களத்தில் நீங்கள் எழுதிய பாடல் ஒலிக்கக் கேட்கையில் எப்படி இருந்தது? அந்தத் தருணத்தை சொற்களில் விவரிக்க முடியுமா…?

எதிர்பாராத ஒன்று சட்டென நடக்கையில் எப்படி மகிழ்ச்சி இரட்டிப்பாய் இருக்குமோ, அதுபோலத்தான் இருந்தது. ஒருபக்கம் பிரபலங்களின் சல்லிக்கட்டுப் பாடல்கள் வேறு வழியின்றியோ அல்லது வேண்டுமென்றோ ஒலித்து வருகையில்… இன்னொரு பக்கம் யாரென்று தெரியாத எங்களின் பாடலை, எவரென்றே தெரியாதவர்கள் அத்தனைக் கொண்டாடி ஒலிக்கவிட்டு ஆடி மகிழ்ந்ததைக் கண்டது இப்போதும் மனக்கண்ணில் அப்படியே காட்சியாக நிற்கிறது.

ஒரு படைப்பாளனுக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரம் என்பது இதுபோன்ற முன்பின் தெரியாதவர்கள் நம் படைப்பைக் கொண்டாடி மகிழ்வதை காண்கையில்தான் இருக்கிறது என்பதைக் கண்டுகொண்ட முதல் தருணம் அது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 036

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=