சொல்லின்றி எதுவுமற்றவன்! – 024

நீங்கள் லயோலாவில் படித்ததால் இந்தக் கேள்வி. அதென்ன அரியர் ஸ்டோன்? பலரையும் போல உங்களுக்கும் அதுதான் பிடித்தமான இடமா?

ஹாஹாஹா… (சத்தமாக சிரிக்கிறார்) அரியர் ஸ்டோன் என்பது எங்கள் கல்லூரியில் இருக்கும் ஒரு கல். வகுப்புக்கு போகாமல் அங்கே உட்கார்ந்து அவ்வழியாக வருபவர் போபவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், தேர்வில் பாஸாக மாட்டார்கள், அரியர் வைப்பார்கள் என்பதால், அந்தக் கல்லுக்கு இப்படியொரு பெயர்.

கிட்டத்தட்ட லயோலாவில் படித்த அனைவரும் அங்கே ஒரு தடவையாவது உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், அவர்களெல்லாம் அரியர் வைத்தார்களா? என்றால், இல்லை.  என்றோ, யாரோ உட்கார்ந்து அரியர் வைக்க, அதனால் வந்த பெயர் இன்றைக்கும் இருந்து வருகிறது. இதோ, இந்நேர்காணல் கேள்வி வரைக்கும் கூட அது வந்திருக்கிறது. ஹாஹா…

பலரையும் போல அதுவொன்றும் எனக்குப் பிடித்தமான இடம் கிடையாது. கல்லூரி முகப்புக் கட்டடத்தின் அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள ஒரு ஸ்டோன் பெஞ்ச்தான் எப்போதும் பிடித்தமான இடம். என் இன்பம் துன்பம் யாவற்றிலும் பங்கு பெற்ற (எனது முதல் எழுத்து வெளிப்பட்ட இடமும் கூட) அந்த பெஞ்ச்தான், நான் படித்து முடித்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் என்னை திரும்பத் திரும்ப கல்லூரிக்கு அழைத்துக்கொண்டிருக்கிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=