கண்ணுமண்ணு தெரியாம(ல்)

கண் முன்னால் இருப்பது கூட தெரியாமல் (இருப்பதும், நடப்பதும், பேசுவதும்).
[கண்ணுமண்ணு தெரியாம(ல்) = கண்ணமண்ண தெரியாம]
– கண்ணமண்ண தெரியாம வேகவேகமா போயி… அப்டி என்னதான் வாரப்போறீயோ, தெருல.
– மொத இப்டி கண்ணுமண்ணு தெரியாம பேசறத வுடு… இல்லனா யாருகிட்டனா ஒததான் வாங்கினு வருவ, பாத்துக்க.
*