கையெழுத்து மறையும் நேரம்

(இருட்டத் தொடங்கும்) மாலை நேரம்.
[வெளிச்சம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து நம் கைரேகை பார்க்கமுடியாத அளவுக்கு மறையும் நேரத்தை இவ்வாறு சொல்வர். கூடவே, எழுதிய எழுத்து படிக்க முடியாத அளவுக்கு இருள்வது குறித்தும் சொல்வர்.]
[கையெழுத்து மறையும் நேரம் = கையெழுத்து மறையிற நேரம் = கையேத்து மறயிற நேரம் = கைரேக மறயிற நேரம்]
– எந்தக் குடியானவன் வூட்லயும்… கையேத்து மறஞ்சதுக்கு அப்றம் கைமாத்து தரமாட்டாங்க.
– கையெழுத்து மறயிற நேரம் ஆய்டிச்சு… இன்னுமா சின்னவன் ஆட்ட ஓட்டினு வரல…?
*