கப்பிமணல்

சற்று பெரிது பெரிதான (சிறுசிறு கல் போன்றிருக்கும்) மணல் வகை.
[கட்டிடம் கட்ட உதவாது எனினும், தரையில் கொட்டி சமதளமாக்க பெரிதும் உதவக்கூடியது.]
[கப்பிமணல் = கப்பிமண்]
– என்ன பண்ணுவியோ தெரியாது… இன்னிக்கே ரண்டுலோடு கப்பிமணல் வாரியாந்து கோயிலாண்ட கொட்டி வுட்ரு.
– கப்பிமணலக் கொட்டி தண்ணி வுட்டு நல்லா ஊற வச்சாதான், அமுங்கி தர சமமாவும்.
*