வேடுகட்டுதல்

பாத்திரத்தின் வாய் பகுதியை துணியால் மூடிக்கட்டுதல் மற்றும் தலை குளிக்கும் பெண்கள் தம் ஈரமுடி உலரவும், முடியிலிருக்கும் நீரானது வழிந்து மேலே சொட்டாமல் இருக்கவும் துவட்டிவிட்டு முடியோடு சிறு துணிகொண்டு சேர்த்துச் சுருட்டிக் கட்டுதல்.

[வேடுகட்டுதல் = வேடுகட்டு]

– எங்கம்மா தெனம் காலில ஏன்ச்சதும் தலக்குளிச்சிட்டு வேடுகட்டினுதான் அடுப்புப் பக்கமே போவாங்க.

– மாங்காய நல்லா துண்டுத் துண்டா வெட்டிப் பானையில உப்புப்போட்டு குலுக்கி வேடுகட்டி வச்சாதான் ருசியேறும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=