லக்கோரி

சிறுவர்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு.

[அதுவும், சிறிதாக ஒரு வட்டமிட்டு, அதன் நடுவில் ஏழு தட்டையான சிறு கற்கள் அல்லது ஓடுகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிவைத்து, இரு குழுவாகப் பிரிந்து நின்று பந்து கொண்டு அடித்துச் சாய்த்துவிட்டு தப்பியோடி எதிரணியிடம் பந்தால் அடிவாங்காமல் திரும்பவும் இருந்ததுபோல் அடுக்கி சுற்றிலும் வட்டம் வரையும் விளையாட்டு.]

[லக்கோரி = லகோரி]

– லக்கோரி ஆடறன்னு வர்றவங்க போறவங்க மேல பந்தடிச்சி வம்புசண்ட வாங்கினு வராத.

– சின்னப் பசங்கக் கூட சேந்து லக்கோரி ஆடற ஆளப் பாரு…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=