வரிவியம்

ஐயாவின் 96 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்தநாளுக்குப் பரிசாக ‘ஐயா 96’ என்னும் பாடலை வெளியிட கடந்த 2020 ஆகஸ்ட் இறுதியில் தொடங்கப்பட்டது எங்களது இந்த ‘வரிவியம்‘ (variviyam) யூடியூப் சேனல்.
வரிவியம் என்பது வரியும் ஓவியமும், அதாவது சொல்லும் காட்சியும் சேர்ந்தது என்னும் பொருளில் உருவாக்கப்பட்ட புதுச்சொல்.
அப்பெயரில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி வருங்காலங்களில் பல தனித்துவமான தனிப்பாடல்களையும், பயனுள்ள தகவல்கள் அடங்கிய காணொளித் தொகுப்பையும், நேர்காணல்களையும், ஆவணப்படங்களையும் வெளியிட வேண்டுமென்பது எங்கள் நீண்டநாள் எண்ணம்.
முதல் பதிவாக ஐயா 96 பாடலின் முன்னோட்டத்தையும், இரண்டாவது பதிவாக ஐயா 96 பாடலையும், மூன்றாவது பதிவாக ஐயாவின் 96 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன 96 பேர்களின் காணொளித் தொகுப்பையும் பதிவிட்டோம்.
அதன்பிறகு எனது சில நேர்காணல்களையும், பாடல்களையும் பதிவு செய்தோம். அண்மையில் என் மொத்தப் பாடல்களையும் ஓரிடத்தில் கேட்க ஏதுவாக ப்ளேலிஸ்ட் (playlist) உருவாக்கி அளித்திருக்கிறோம்.
என் முதல் தனிப்பாடலான தொப்புள்கொடி தொடங்கி சமீபத்தில் வெளியான நிலைத்திணை வாழ்த்து வரைக்கும் தமிழில் இதுவரை யாரும் தொடாத பல புதிய களங்களைத் தொட்டு நூற்றிருபதுக்கும் அதிகமானத் தனிப்பாடல்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன். தமிழ்ப் பாடலாசிரியர்களில் இவ்வளவு குறுகிய காலத்தில் மிக அதிகமாகத் தனிப்பாடல் எழுதி வெளியிட்டது நானாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
தொடர்ந்து தோழமைகள் தனிப்பாடல் உருவாக்கத்திற்குத் தேவையான ஒத்துழைப்பையும் உதவிகளையும் செய்தால் வருங்காலங்களில் இன்னும் பல அரிய படைப்புகளை உருவாக்கி வெளியிடப் பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
*