ஐபக்கம் – 042 : வரலாறு முக்கியம்

#ஏப்ரல்24,2024
‘தாவர சங்கமத்துக்கு’ முன்னுரை எழுதி முடிக்கப் போகிறேன்.
”பட்ட்டு… பட்ட்டு…’’ என்று கூப்பிட்டுக்கொண்டு வேகமாக வந்த மதி, ”உடனே எழுந்து… வாயேன்’’ என்றாள். போனேன்.
கடந்த சில நாட்களாக மிகத் தீவிரமாக கவிழ முயற்சித்து வந்த ஐ, இன்று வெற்றிகரமாக தனது 119 ஆவது நாளில் கவிழ்ந்திட்டான். ஆம்!
அந்த அரிய காட்சியை உள்ளம் மகிழ கண்டுவிட்டு வந்து, முன்னுரையின் இறுதியில் இவ்வாறு எழுதி முடித்திட்டேன்.
‘மகன் ‘ஐ’ முதல் தடவையாக கவிழ்ந்திட்ட ஏப்ரல் 24, 2024.’
ஆயிரம்தான் இருந்தாலும், நமக்கு வரலாறு முக்கியமல்லவா!
*