சாபம்
தனிமை தாழ்வாரத்தில்
திக்கித்து நின்றபோது
சில்லாக் கோலின் கூர்மையில்
குத்துபட்டது கால்விரல்
குருதிக்கு பதிலாக
சொற்கள் பீறிட
வலிச்சரிவில் விழுந்த
விதவையானேன்
கண்கள் களைந்த நிமிடங்கள்
கணக்கில் வராத
பதர்களாகி
என்னைக் கொண்டு என்னை
சிறை பிடித்தது
மூக்கரக்காத்து
சொற்களின்றி ஏதுமற்றவனுக்கு
அதுவும் இல்லாத வதை
வாழ்நாள் சாபமன்றி
வேறொன்றுமில்லை ஐயன்மாரே