சொல்லன்றி எதுவுமற்றவன்! – 337
அதற்கு இப்போதே என் வாழ்த்துகள். உங்களூரில் பரவலாக உள்ள முள் மரமான பூலா ஒரு பழமையான கோயிலின் தலத்தாவரமாக இருப்பதை கேள்வியுற்று தேடிப் போய் பார்த்த சம்பவத்தை தாவர சங்கமம் தொடரில் பதிவு செய்திருப்பீர்கள். அதுபோல அடுத்து சென்று காண விரும்பும் தாவரம் எது, ஏன்?
உங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆல மரத்தைக் காண பல ஆண்டுகளாக ஆவலோடு காத்திருக்கிறேன். காரணம், அதுதான் உலகின் மிகப்பெரிய ஆலமரம். கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் அளவுக்கு பரந்து விரிந்தது. இம்மரத்தின் அடியில் திம்மம்மா என்னும் சிறு தெய்வ வழிபாடு நடந்துவருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் அங்கே வருகை தந்து தெய்வத்தோடு சேர்த்து மரத்தையும் வழிபட்டுச் செல்கிறார்கள்.
இத்தகைய பெருமை மிகுந்த ஆலமரத்தை சென்று காண வேண்டும். அதன் அடிமரத்தைக் கட்டிக்கொண்டு, விழுதுகளையும், கிளைகளையும் பிடித்துத் தொங்க வேண்டும். இலைகளை வருட வேண்டும். அவற்றோடு கதைகள் பல பேச வேண்டும். முடிந்தால் அவற்றின் பழங்களைப் பறித்து உண்ண வேண்டும்.
[இன்னும்]
*