சொல்லின்றி எதுவுமற்றவன்! – 191

‘அரசங்கல்’ உங்களது முதல் சிறார் நாவல். ‘குழந்தைமையோடு சுற்றித்திரிபவன்’ என அடிக்கடி நண்பர்களிடம் நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அரசங்கல் எப்படியான நாவல் என்று சொல்லமுடியுமா?

சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து, எனது பள்ளிக் காலங்களை மீட்டி எழுதப்பட்ட சிறார்க்கான நாவல் இது.

அதேநேரம், பெரியவர்களும் இதை வாசிக்கலாம். இதன் தனித்துவமாக; பலமாக நான் நினைப்பது, இந்நூலில் வரும் சிறுவர்கள் அனைவரும் எந்தவித பாசாங்கும் இல்லாமல் மண்மொழியில் இயல்பாகப் பேசுவதும், தம் வாழ்வை எவ்வட்டத்துக்குள்ளும் சுருக்கிக் கொள்ளாமல் பரந்துபட்டு ஒரு பறவை போல வாழ்வதும்தான்.

இதனாலேயே சிறார் நூல்கள் வரிசையில் இந்நூல் தனித்த இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 190

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=