சொல்லின்றி எதுவுமற்றவன்! – 115
‘முன்னாள் இருந்தவர்கள்’ கடிதத்தை வாசித்ததும் கண்கள் கலங்கிவிட்டது. யார் யார் பெயரை எல்லாமோ தெரிந்து வைத்திருக்கும் இத்தலைமுறையினர், தன் தாத்தா – பாட்டி பெயர்களை தெரியாமல் இருக்கிறார்களே என நினைத்தபோது பெரும் வேதனையாக இருந்தது.
(முடிக்கும் முன்னமே ‘ஆமாம்’ என தலையாட்டி தொடர்ந்தார்)
இது இந்த தொழில்நுட்ப உலகம் தந்த சாபம் என்று பலரும் சொல்வார்கள். நான் முழுவதும் அப்படி சொல்ல மாட்டேன். அதுவும் ஒரு காரணம், அவ்வளவுதான். முதன்மைக் காரணம், குழந்தையின் தாய் – தந்தையர். அவர்கள் குழந்தைகளுக்கு தம் முன்னோர்கள் பற்றி சொல்லி வளர்க்கவேண்டும். மிகக் குறைந்தபட்சம் அவர்களது பெயர்களையாவது சொல்லவேண்டும்.
அதேநேரம் பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்குள் ஆர்வத்தை விதைக்க வேண்டும். எந்தப் பள்ளிக்கூடமும் மகாத்மா காந்தியின் அப்பா – அம்மா, தாத்தா – பாட்டி யார் என்று கேட்கிறதே தவிர, குழந்தைகளின் தாத்தா – பாட்டி பெயரை கேட்பதில்லை. வீடுதோறும் ஒரு ‘ஃபேமிலி ட்ரீ’ வரைந்திருந்தால், ஒவ்வொரு குழந்தைகளும் தனது தாத்தா – பாட்டிகளின் பெயர்களையாவது குறைந்தபட்சம் தெரிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.
[இன்னும்]
*